துளசி செடி இருந்தால் போதும் இனி காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லை

தேவையான பொருள்

துளசி இலை ஒரு கைப்புடி அளவு
கற்பூரவல்லி இலை ஒரு கைப்புடி அளவு
மிளகு 5 கிராம்
தண்ணீர் 200 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் துளசி இலை,கற்பூரவல்லி இலை மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் நீருடன் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு 200 மி.லி நீரை 100 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி அப்புறம் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வடிகட்டிய நீருடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து குடித்து வந்தால் கொடிய காய்ச்சலும் கூட நம் உடலை அண்டாது.