மூட்டு தேய்மானம் அடைவதை தடுக்கும் மூலிகை மருத்துவ முறைகள்

தேவையான பொருள்

வேப்பம் எண்ணெய் 20 மி.லி
விளக்கு எண்ணெய் 20 மி.லி
கடுகு எண்ணெய் 20 மி.லி
நல்லெண்ணெய் 20 மி.லி
புங்கன் எண்ணெய் 20 மி.லி
கற்பூரம் 20 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சமஅளவு எடுத்துக்கொள்ளப்பட்ட வேப்பம் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,கடுகு எண்ணெய்,நல்லெண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெய் ஆகிய ஐந்து வகையான எண்ணெய்களையும் ஒன்று சேர ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் வடிகட்டப்பட்ட எண்ணையுடன் கற்பூரதையும் இடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு நீலகிரி தைலமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட தைலத்தை அன்றாடம் மூட்டின் தோல் மீது தேய்த்து வந்தால் மூட்டு தேய்மானம் கரைந்து போகும்.