தேவையான பொருள்
| சீரகம் | 15 கிராம் |
| சோம்பு | 15 கிராம் |
| ஓமம் | 30 கிராம் |
| உப்பு | 10 கிராம் |
| தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சீரகம்,சோம்பு,ஓமம் மற்றும் உப்பு ஆகிய நான்கு பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து எடுத்துக்கொள்ளவும்.இடித்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த தண்ணீருடன் 10 கிராம் அரைத்த பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
- இந்த மருத்துவ குணமிக்க நீரை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை முற்றிலுமாக நீங்கும்.

