தேவையான பொருள்
| குப்பைமேனி இலை | தேவையான அளவு |
| கஸ்துரி மஞ்சள் | 20 கிராம் |
| தயிர் | 20 மி.லி |
| எலுமிச்சை பழம் | அரைத்துண்டு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு குப்பைமேனி இலையை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி சேகரித்து கொள்ள வேண்டும்.
- உலர்த்தப்பட்ட இலையுடன் 20 கிராம் கஸ்துரி மஞ்சள் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும்.மேலும் இதனுடன் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும்.இப்போது இந்த பொருட்கள் பசை போன்ற தன்மையை அடையும்.
- பிறகு அரைத்த பொருட்களை தேவைற்ற முடி உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் உலர வைத்து நீரால் கழுவ வேண்டும்.
- பிறகு தேவைற்ற முடி உள்ள இடங்களில் எலுமிச்சை பழ சாற்றை தேய்த்து குளிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள தேவைற்ற முடிகள் அறவே நீங்கும்.

