வயிற் பிரச்சனை சரியாக

தேவையான பொருள்

பச்சை மிளகாய்2
பூண்டு பல் தோல் உரித்து6
இஞ்சி1 சிறிய துண்டு
சீரகம்1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய்1 டேபிள் ஸ்பூன்
நெய்1 ஸ்பூன்
கடுகு1 ஸ்பூன்
உளுந்து1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு1 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு10
வேர்க்கடலை1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை1 கொத்து
பெருங்காயம்1/4 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்2 டேபிள் ஸ்பூன்
உப்பு2 சிட்டிகை

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகளை இளசான காம்புகளோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு பச்சை மிளகாய் 2, பூண்டு பல் தோல் உரித்து – 6, இஞ்சி – 1 சிறிய துண்டு, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.
  • வடித்த உதிரி உதிரியான சாதம் 3 பேர் சாப்பிடும் அளவிற்கு நமக்கு தேவை. சாதத்தில் உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு குழையாமல் வேக வைத்து, ஆற வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாதமும் அப்படியே இருக்கட்டும்.
  • இப்போது கொத்தமல்லி சாதத்தை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 – டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 1 – ஸ்பூன் நெய், ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு இந்தப் பொருட்களையெல்லாம் பொன்னிறமாக வறுத்த பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, 2 சிட்டிகை உப்பு போட்டு வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை கடாயில் இருக்கும் தாளிப்பில் சேர்த்து, இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட வேண்டும். அரைத்த கொத்தமல்லி விழுதை சேர்த்து கூடவே 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வழக்கினால் கொத்தமல்லியின் பச்சை நிறமும் பசுமையான வாசனையும் மாறாமல் இருக்கும்.
  • பச்சை நிறத்தில் ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல் வடாம் உருளைக்கிழங்கு வறுவல் எதை வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இதை லஞ்ச் பாக்ஸ் சுக்கு கட்டிக் கொடுத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.