வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
அத்துடன் அரிசி சேர்த்து மெஷினில் நன்கு நைஸ் மாவாக திரித்து வைத்து கொள்ளவும் .
இது தான் களி மாவு. பனை வெள்ளத்தை பொடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதி வரும் போது அரைத்த அரிசி உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவி கொண்டே கை விடாமல் கிளரவும்.
நடு நடுவே நல்லெண்ணெய் விட்டு கட்டி தட்டாது கிளற வேண்டும்.
மாவு சிறிது வெந்ததும் ஏலக்காய்தூள், சுக்கு பொடி, எண்ணை சேர்த்து கிளறவும். பிறகு களி உருண்டு வரும் பதத்தில் இரக்கவும்.