ஆண்களின் இடுப்பு வலியை நீக்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

பனை வெல்லம் 10 கிராம்
அருகம் புல் ஒரு கைப்புடி அளவு
பசும் நெய் 5 கிராம்
தேங்காய் பாதியளவு
மலை வாழைப்பழம் 1
அமுக்கரா கிழங்கு பொடி 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அருகம் புல்லுடன்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதன் பிறகு அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் பசும் நெய் ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் ஏற்கனவே வடிகட்டி வைத்திருந்த அருகம் புல் சாற்றை 2 தேக்கரண்டி சேர்க்கவும்.
  • பிறகு இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்த தேங்காய் மற்றும் மலை வாழைப்பழம்,பனை வெல்லம் ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாற்றை காலையில் வெறும்வயிற்றுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான இடுப்பு வலி முற்றிலுமாக நீங்கி விடும்.