அஜீரணம் கோளாறு நீங்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

பனை வெல்லம் தேவையான அளவு
வெற்றிலை 3 முழுமையான இலைகள்
கறிவேப்பிலை 2 கொத்து
அண்ணாச்சி பூ 1
சீரகம் 5 கிராம்
ஓமம் 5 கிராம்
இஞ்சி சிறு துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்பு அண்ணாச்சி பூ,சீரகம் மற்றும் ஓமம் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து நன்கு இடித்து அரைத்து எடுக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் சிறு துண்டு இஞ்சி,வெற்றிலை மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான பொடியில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
  • அஜீரண கோளாறு ஏற்படும் வேளையில் இந்த மூலிகை மருந்தை உருவாக்கி பயன்படுத்தி வந்தால் அரை மணி நேரத்தில் உடலில் உள்ள எல்லா வகையான அஜீரண கோளாறும் நீங்கும் 
பனை வெல்லம்
வெற்றிலை
கறிவேப்பிலை
சீரகம்
ஓமம்
அண்ணாச்சி பூ
இஞ்சி