தேவையான பொருள்
| பூண்டு(பற்கள்) | 2 எண்ணிக்கை |
| தேன் | தேவையான அளவு |
| தண்ணீர் | 100 மி.லி |
| எலுமிச்சை சாறு | 10 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு பூண்டை எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்கு இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 10 மி.லி சாற்றை சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது 100 மி.லி தண்ணீருடன் இடித்த பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- மேலும் இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இவ்வாறு உருவான ஆரோக்கிய பானத்தை தினந்தோறும் காலையில் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

