வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்

குமட்டல், வாந்தி என்பதே கொஞ்சமும் சமாளிக்க முடியாத உணர்வு. அது எந்தவித வேலையையும் செய்ய விடாமல் நம்முடைய ஒட்டும்மொத்த மனநிலையையும் மாற்றி ஒரு இடத்தில் அமர வைத்துவிடும். அந்த உணர்வுடன் நடக்கும் போராட்டத்திற்கு வார்த்தைகளே இருக்காது. இப்படிப்பட்ட உணர்வை நீங்கள் எளிதில் போக்க வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பன்னி பாருங்க.

இஞ்சி : பித்தம், வயிறு கோளாறுகளை நீக்குவதில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது இஞ்சி . எனவே வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு துண்டு வாயில் போட்டு மென்று விழுங்குங்கள் அல்லது இஞ்சியை தண்ணீரில் நன்குக் கொதிக்க வைத்து இஞ்சி டீ குடிக்கலாம்.

எலுமிச்சை : குமட்டலாக இருக்கும் போது எலுமிச்சை சாற்றின் சுவையும் , வாசனையும் புத்துணர்வை அளிக்கும். எலுமிச்சை சாறு அதோடு கொஞ்சம் உப்பும் சேர்த்து குடித்துப் பாருங்கள். குமட்டல் நீங்கும்.

மசாலா பொருட்கள் : சோம்பு, பட்டை, கிராம்பு இவையும் வாந்தி , குமட்டலை கட்டுப்படுத்தும். எனவே இவற்றைப் பயன்படுத்தி நல்ல டீ போட்டு வெதுவெதுப்பாக குடித்துப் பாருங்கள். புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஏலக்காய் : ஏலக்காய் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளை குணப்படுத்த உதவும். எனவே குமட்டலாக இருப்பது போல் உணர்ந்தாலே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள். குமட்டல் உணர்வே இருக்காது. வயிறு கோளாறு இருந்தாலும் சரி செய்துவிடும்.

பேக்கிங் சோடா : குமட்டல், வாந்திக்கு பேங்கிங் சோடா நல்ல தீர்வு. வெதுவெதுப்பான தண்ணீரில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடித்தால் வயிற்றில் கலந்திருக்கும் ஆசிட்டின் PH அளவை சீராக்கி குமட்டலை போக்கும்.

இஞ்சி
எலுமிச்சை
ஏலக்காய்
பேக்கிங் சோடா
பட்டை