வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்

வேப்பிலை:

நமது தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தவரை வீட்டிற்கு ஒரு வேப்பமரம் வேண்டும் என்பார்கள். ஏனெனில், வேப்பமரம் கோடைக் காலத்தில் மிகுந்த குளிர்ச்சியை தருவதோடு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, இந்த வியர்வை தாக்குதல் பிரச்சினையிலிருந்து விடுபட உங்களுக்கு வேப்பிலை நன்றாகவே உதவுகிறது. வேப்பிலையை நன்றாக பசை போன்று அரைத்துக் கொண்டு பாதிப்பு இருக்கக்கூடிய இடங்களில் நாம் தொடர்ந்து தடவி வந்தால் மிக விரைவாக அவை குணமாகி உங்களை நிம்மதி அடைய செய்யும்

​சந்தனம்

மிகக் குளிர்ச்சியான பொருளாக சந்தனம் பார்க்கப்படுகிறது. தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தில் மஞ்சளிற்கு மிக முக்கிய இடம் உண்டு. தமிழ்நாடு போன்ற கடுமையான வெயில் கொண்ட மாநிலத்தில் சந்தனத்தின் தேவை அதிகமாக இருக்கும். சந்தனத்தை அரைத்து பொடியாக்கி கொண்டு ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட்டாக்கி அவற்றை நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் நாம் தொடர்ந்து தடவி வந்தால் அவற்றிலிருந்து வரும் குளிர்ச்சியின் காரணமாக நம்முடைய உடல் குணமாகி நன்மை அளிக்கும்.

மருதாணி

சில மருதாணி இலைகளை ஒரு தண்ணீரில் அரைத்து பேஸ்ட் போன்று உருவாக்கி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் தடவினால் அவை நல்ல பலனை அளிக்கும், இருப்பினும், மருதாணி உங்கள் சருமத்தை கறைப்படுத்தக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை சில நாட்களுக்காவது நீடிக்கும். மருதாணியானது பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து புண்ணை குணப்படுத்துவது மட்டுமின்றி, எரியும் உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

தயிருடன் ஆப்பிள்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை இறுக்குகிறது, அதே நேரத்தில் ஆப்பிளின் ஆண்டிஆக்சிடண்ட்டும் தயிருடன் சேர்ந்தால் அவை வியர்வை புண்ணினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தோலிற்கு நல்ல பலனை அளிக்கும். தயிரில் சில ஆப்பிள்களை பிசைந்து நல்ல கலவையை உங்கள் முகத்தில் தடவவும். நீங்கள் வாழைப்பழம் மற்றும் கிவிப் ப்ழத்தினை கூட இதில் சேர்க்கலாம். இவை பெரும் நன்மையினை அளிக்கும்.

பாசிப்பயறு

உங்கள் வழக்கமான சோப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருளினை உடலில் தேய்த்து குளிக்கலாம். இதற்காக, சம அளவு பாசிப்பயறு தூள், அரிசி மாவை கலக்கவும். நன்றாக பேஸ்ட் செய்ய தண்ணீர் சேர்த்து தடவவும். அதை உலரவிட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும். இதே முறையில் தொடர்ந்து செய்து வந்தால் வியர்வை வெப்பத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பித்து விடலாம்.