தேவையான பொருள்
கற்பூரவள்ளி இலை | 2 எண்ணிக்கை |
சித்திரத்தை | 10 கிராம் |
மிளகு | 7 எண்ணிக்கை |
தண்ணீர் | 200 மி.லி |
வெற்றிலை | 1 |
துளசி | ஒரு கைப்புடி அளவு |
சுக்கு | சிறிதளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- பிறகு சுக்கு,மிளகு மற்றும் சித்திரத்தை ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
- மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை,துளசி,வெற்றிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் தண்ணீரை 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.
- பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீரை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி முற்றிலுமாக நீங்கும்.