அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.
கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
உப்பு சேர்த்து புளிக்க விடவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.