முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு ஒரு கைப்புடி அளவு மூக்கிரட்டை இலையை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு நீரை நன்றாக அரைத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதன் சாற்றினை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை போல அருகம் புல்லையும் நன்றாக நறுக்கி சிறிதளவு நிறை விட்டு அரைத்து சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது இந்த இரண்டு வகையான சாறையும் ஒன்று சேர ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் கால் சிட்டிகை மிளகுபொடியை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைக்கப்பட்ட சாற்றினை சிறியவர்கள் 10 மி.லி மற்றும் பெரியவர்கள் 30 மி.லி குடித்து வந்தால் நீண்ட ஆயுள் பெறலாம்.