முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் வேப்பம்பட்டை,வேப்பிலை,சீரகம் மற்றும் மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி கொதிக்கும் நீரில் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்து கலக்க வேண்டும்.
இவ்வாறு உருவான மருத்துவ தேநீரை காய்ச்சல் காலங்களில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்பாற்றால் அதிகமாகி வைரஸ் நோயை வென்று விடலாம்.