உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்

தேவையான பொருள்

வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு
புளி சிறிதளவு
காய்ந்த மிளகாய் 2 எண்ணிக்கை
பெருங்காயத்தூள் சிறிதளவு
தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கடுகு ஒரு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வேப்பம்பூவை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். 
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து தாளிக்கவும்.
  • மேலும் இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். 
  • கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
  • இப்போது சுவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயார் ஆகி விடும்.
வேப்பம் பூ
புளி
காய்ந்த மிளகாய்
பெருங்காயத்தூள்
உப்பு
கடுகு
தேங்காய் எண்ணெய்