நீரிழிவை கட்டுப்படுத்தும் முருங்கைக் கீரை துவட்டல்

தேவையான பொருள்

முருங்கைக் கீரைஒரு கட்டு
கடுகுஅரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்5
வேர்க்கடலை2 டீஸ்பூன்
பூண்டு 5 பல்

உப்பு 

 தேவையான அளவு

செய்முறை

  • கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு அத்துடன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, அத்துடன் கீரையையும் சேர்த்து வதக்கவும்.

  • சிறிது தண்ணீர் தெளித்து வதக்கி, தட்டு போட்டு மூடவும்.
  • கீரை வெந்ததும் இறக்கி, வேர்க்கடலைப் பொடியைத் தூவவும். தேவைப்பட்டால், தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.