முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு இதனுடன் இலவங்க பட்டை மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த நீருடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க தேநீரை தினந்தோறும் குடித்து வந்தால் அளவான உடலோடு அழகான தோற்றமும் பெற முடியும்