தேவையான பொருள்
பச்சரிசி | 10 கிராம் |
சிறுபருப்பு | 10 கிராம் |
பூசணிக்காய் (நறுக்கியது ) | தேவையான அளவு |
உருளைக்கிழங்கு (நறுக்கியது ) | தேவையான அளவு |
கேரட் (நறுக்கியது ) | தேவையான அளவு |
தண்ணீர் | 200 மி.லி |
பூண்டு(பற்கள் ) | 1 |
உப்பு | சிறிதளவு |
நெய் | சிறிதளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகுபூசணிக்காய்,உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை நீரில் நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
- பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீருடன் பச்சரிசி,சிறுபருப்பு மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- மேலும் இதனுடன் பூண்டு சேர்த்துக்கொள்ளவும்.
- இப்போது வேக வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது சுவைமிகுந்த சத்தான உணவு தயார் ஆகி விடும்.