முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

தண்ணீர் தேவையான அளவு
புழுங்கல் அரிசி ஒரு கைப்புடி அளவு
வெந்தையம் 10 கிராம்
சீரகம் 5 கிராம்
பூண்டு (பற்கள்) 5 எண்ணிக்கை
உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு புழுங்கல் அரிசி மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை சேர்த்து அதில் வெந்தயத்தை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை சேர்த்துகொண்டு அதனுடன் இடித்து பொடியாக்கிய அரிசி மற்றும் சீரகத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் பூண்டு (பற்கள்) மற்றும் உப்பும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது உடலின் ஜீரண தன்மையை அதிகரிக்க செய்யும் வெந்தய கஞ்சி தயார் ஆகி விடும்.