காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்

தேவையான பொருள்

மாதுளை பழம்1
தேன்சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு மாதுளை பழம் ஒன்றினை எடுத்து நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி அதன் உட்பகுதியை எடுத்துக்கொண்டு அதனுடன்  சிறிதளவு நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
  • அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு  அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாறை தினந்தோறும் குடித்து வந்தால் வெள்ளை அணுக்கள் அதிகரித்து உடலில் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க முடியும்.