சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்

தேவையான பொருள்

வாழைத்தண்டு100 கிராம்
தேங்காய் துருவல்5 கிராம்
பெருங்காயம்5 கிராம்
கறிவேப்பிலைதேவையான அளவு
கொத்தமல்லி கீரை இலைதேவையான அளவு
நல்ல எண்ணெய்20 மி.லி
வத்தல்1
இஞ்சி துருவல்5 கிராம்
தயிர்100 மி.லி
கடுகு5 கிராம்
உப்புதேவையான அளவு
உளுந்தம்
பருப்பு
5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நன்றாக நறுக்கிய வாழைத்தண்டு மற்றும் தயிரைசேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் இஞ்சி துருவல்,தேங்காய் துருவல்,உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக்கொண்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாற்றினை மட்டும் வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு புதிதாக ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் பெருங்காயம்,கடுகு,உளுந்தம் பருப்பு மற்றும் வத்தல் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.தாளிக்கப்பட்ட பொருட்களை ஏற்கனவே வடிகட்டி வைத்த மோர் சாற்றுடன் சேர்த்துக்கொண்டு சிறிதளவு கொத்தமல்லி கீரை இலையையும் சேர்த்து கலக்கி விட்டால் போதும் வாழைத்தண்டு மோர் தயார் ஆகி விடும்.