குடற்புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

பூசணி விதை 100 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 கிராம் பூசணி விதைகளை சூரிய ஒளியில் நன்கு உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பூசணி விதைகளை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு பூசணி விதை பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.
  • மற்றோரு வழி என்னவென்றால் பப்பாளி விதை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • அரைத்த பொடியையும் தேனுடன் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.
தேன்
பூசணி விதை