தேவையான பொருள்
பற்பாடகம் வேர் | 5 கிராம் |
மிளகு தூள் | 5 கிராம் |
சுக்கு தூள் | 5 கிராம் |
சீரகம் தூள் | 5 கிராம் |
தண்ணீர் | 200 மி.லி |
நிலவேம்பு இலை | ஒரு கைப்புடி அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் பற்பாடகம் வேர்,மிளகு தூள்,சுக்கு தூள் மற்றும் சீரகம் தூள் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
- கடைசியாக ஒரு கைப்புடி அளவு நிலவேம்பு இலையையும் சேர்த்துக்கொண்டு கொதிக்க வைத்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இவ்வாறு கிடைத்த கசாய நீரை தினமும் இரவு நேரங்களில் குடித்து வந்தால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை மற்றும் குடல் புழுக்களை உடலில் வெளியேற்ற உதவுகிறது.