முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்பு அதனை அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கீரையுடன சேர்த்து கலந்தால், அரைக்கீரை மசியல் ரெடி!!!