கடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

குங்கிலியம் 10 கிராம்
ஏலக்காய் 25 கிராம்
கோரைக்கிழங்கு 20 கிராம்
திப்பிலி 10 கிராம்
கற்கண்டு 20 கிராம்
சிவப்பு சந்தன தூள் 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவு எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கற்கண்டு தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை மிதமான சுட்டில் இரண்டு நிமிடம் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் கற்கண்டு சேர்த்துக்கொண்டு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • கடுமையான வாந்தி உள்ள நேரங்களில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக்கொண்டு வெந்நீரில் குடித்து வர வாந்தி படிப்படியாக குறையும்.
  • மேலும் மலக்குடல் புழுக்கள் முற்றிலுமாக வெளியேற்ற படும்.