வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்

தேவையான பொருள்

வாழைப்பழம் 1
தயிர் 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் 1 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் 3 தேக்கரண்டி
கற்றாழை சாறு தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும்.
  •  கைகளால் மசித்தாலும் போதும் பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ( முதல் முறை பிழிந்து எடுக்கப்பட்ட பால்) தேங்காய் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாக கடையவும்.
  • இவை அனைத்தும் சேர்ந்து பசை தன்மைக்கு கொண்டு வரவும். 
  • இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.
  • முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். 
  • இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.
  • பிறகு சாதாரண நீரில் குளித்து வரவும்.
  • ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும் மற்றும் பளபளப்பும் கூடும்.
தேங்காய்ப்பால்
தேங்காய் எண்ணெய்
கற்றாழை சாறு