தேவையான பொருள்
ஆவாரம்பூ பொடி | 2 டீஸ்பூன் |
இஞ்சி | சிறு துண்டு |
இலவங்கபட்டை | சிறு துண்டு |
தேன் அல்லது நாட்டுசர்க்கரை | தேவையான அளவு |
ஏலத்தூள் | 2 சிட்டிகை |
மிளகுத்தூள் | 2 சிட்டிகை |
செய்முறை
-
- முதலில் கொடுக்கப்பட்டு உள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு ஆவாரம் பூவை 5 இருந்து 7 நாட்கள் காய வைத்து அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும்.
- ஒன்றரை டம்ளர் தண்ணீரில் ஆவாரம்பூ பொடியையும் இலவங்கபட்டையையும் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்.
- மேலும் இதனுடன் இஞ்சியை இடித்து போடவும்.
- நீர் கொதித்ததும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கவும்.
- இதை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக இது விளங்கும்.
- ஆவாரம் பூ உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானமாக உதவும்.
- உடல் சோர்வை விரட்டி அடிக்கும்.
- கோடையில் உண்டாகும் நீர்கடுப்பு, குடற்புண், சிறுநீரக குறைபாடு போன்றவற்றை நீக்கும்.
- மலச்சிக்கல் பிரச்சனை வராமல் பாதுகாக்கும்.