மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்

தேவையான பொருள்

சோற்று கற்றாழை 50 கிராம்
தேன் சிறிதளவு
எலுமிச்சை சாறு சிறிதளவு
இஞ்சி சிறிய துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய கற்றாழை உடன் நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர்  சேர்த்து அரைத்து அதனை சாறு போல மாற்றவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் (சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்க வேண்டாம்)சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெறலாம். 
இஞ்சி
சோற்று கற்றாழை
தேன்