தேவையான பொருள்
எலுமிச்சை பழம் | 1 அல்லது 2 |
சிறிய வெங்காயம் | தேவையான அளவு |
தேன் | 100 மி.லி |
முருங்கை கீரை | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சிறிய வெங்காயம் ஒன்றை எடுத்து கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இவற்றுடன் ஒரு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- முருங்கை கீரையை நன்றாக சாறு போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த முருங்கை கீரையை ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்ட அரைத்த வெங்காயம் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் அரை தேக்கரண்டி இந்த அரைத்த முருங்கை கீரையை சேர்க்க வேண்டும்.பிறகு இதனுடன் சமஅளவு தேனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு உருவான மருந்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு சுமார் 1 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தால் தேவைற்ற கொழுப்பு நீங்கி உடல் எடை குறைந்து உடல் பலம் பெறும்