தேவையான பொருள்
| முருங்கை கீரை இலை | சிறிதளவு |
| குப்பைமேனி இலை | சிறிதளவு |
| முடக்கத்தான் இலை | சிறிதளவு |
| உப்பு | தேவையான அளவு |
| மஞ்சள் தூள் | 5 கிராம் |
| ஆமணக்கு எண்ணெய் | 10 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு இலைகளை நீரில் கழுவி சுத்தம்படுத்தி எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் இட்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
- பிறகு மூன்று வகையான இலைகளையும் சேர்த்து வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மூன்றில் ஒரு பகுதி வரும் வரை நன்கு வசக்க வேண்டும்.
- இவ்வாறு கிடைத்த பொரியலை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

