தேவையான பொருள்
மிளகு | 5 கிராம் |
சுக்கு | 5 கிராம் |
துளசி இலை | ஒரு கைப்புடி அளவு |
பெருங்காயம் பொடி | கால் சிட்டிகை |
உப்பு | கால் சிட்டிகை |
மஞ்சள் பொடி | கால் சிட்டிகை |
தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு துளசி இலையே கழுவி சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும்.மேலும் இந்த துளசி இலையுடன் சுக்கு மற்றும் மிளகு சேர்த்து நன்கு இடித்து கொள்ள வேண்டும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்து மேலும் கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் இதனுடன் பெருங்காயம் பொடி,மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் குடித்து வந்தால் உடல் வலி அறவே நீங்கும்.