உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சுக்கு 100 கிராம்
அதிமதுரம் 100 கிராம்
சித்தரத்தை 30 கிராம்
கடுக்காய் பொடி 30 கிராம்
மஞ்சள் 10 கிராம்
திப்பிலி 5 கிராம்
ஓமம் 5 கிராம்
கிராம்பு 5 கிராம்
மிளகு 5 கிராம்
கற்பூரவள்ளி இலை 5 எண்ணிக்கை
புதினா இலை 10 எண்ணிக்கை
எலுமிச்சை சிறிய துண்டு
இஞ்சி சிறிய துண்டு
தண்ணீர் 400 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கற்பூரவள்ளி இலை,புதினா இலை,எலுமிச்சை மற்றும் இஞ்சி தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே நன்கு வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீரில் ஒரு  தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • மேலும் கொதிக்கும் நீருடன் கற்பூரவள்ளி இலை,புதினா இலை,எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகிய பொருட்களையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  • மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீருடன் சிறிதளவு  பனை வெல்லம்  சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது அருமையான மூலிகை சாறு தயார் ஆகி விடும்.குழந்தைகளுக்கு 50 மி.லி மற்றும் பெரியவர்களுக்கு 100 மி.லி குடிக்கலாம்.