முழங்கால் வீக்கத்தில் இருந்து விடு படுவதற்க்கான மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

கேழ்வரகு மாவு 10 கிராம்
பீர்க்கங்காய் 1
மஞ்சள் தூள் 5 கிராம்
கிராம்பு 7 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இடித்த கிராம்பு,கேழ்வரகு மாவு  மற்றும் மஞ்சள் தூள் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி மிதமான சூட்டில் நன்றாக பாகு தன்மை அடையும் வரை சூடு படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் பீர்க்கங்காயை சாறு போன்று அரைத்து மூன்று தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு சற்று சூடாக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடு குறைந்த பிறகு வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் முழங்கால் வீக்கத்தில் இருந்து முற்றிலும் விடுப்பட்டு விடலாம்.