முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு தேவையான அளவு பனை வெல்லதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு லேசான சூட்டில் வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் அரைத்த துத்தி இலை விழுது மற்றும் நெல்லிக்காய் துருவல் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.
மேலும் இதனுடன் சோற்று கற்றாழை (தோல் நீக்கிய உட்பகுதி) சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு மீதம் உள்ள கடுக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு லேகியம் தன்மை வரும் அளவு சிறிது நேரம் சூடாக்க வேண்டும்.
இவ்வாறு உருவான லேகியத்தை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் மூலநோய் முற்றிலுமாக நீங்கும்.