முகத்தில் தோன்றும் மங்குவை போக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

புதினா இலை ஒரு கைப்புடி அளவு
படிகாரம் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு படிகாரத்தை நன்கு பொடியாக இடித்துக்கொள்ளவும்.
  • புதினா இலையை ஒரு கைப்புடி அளவு எடுத்துக்கொண்டு தண்ணீர்விடாமல் அரைத்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் புதினா இலை சாறுடன் இடிக்கப்பட்ட படிகாரத்தை சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.
  • மேலும் இதனை மங்கு உள்ள இடத்தில் தடவவும்.
  • பிறகு 10 நிமிடம் உலர வைத்துவிட்டு சாதாரண நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் மங்கு படிப்படியாக குறையும்.
  • இதை தொடர்ந்து செய்து வந்தால் நிரந்தர பலன் கிடைக்கும்.
படிகாரம்
புதினா இலை