உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி? August 7, 2020 | No Comments தேவையான பொருள் நல்ல எண்ணெய் 50 மி.லி மிளகு 7 எண்ணிக்கை பூண்டு(பற்கள்) 4 எண்ணிக்கை வெந்தயம் 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.மிளகு மற்றும் பூண்டு(பற்கள்) தனித்தனியாக இடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு 50 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த எண்ணெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் வெந்தயம் சேர்த்துக்கொண்டு 25 மி.லி வரும் வரை எண்ணெய்யை சூடுபடுத்தவும்.பிறகு எண்ணெய்யை ஆற வைத்து வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெய்யை உச்சந்தலை,தொப்புள் மற்றும் கால் கட்ட விரலில் தடவி வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதை நீங்கள் உணரலாம். மிளகு நல்ல எண்ணெய் பூண்டு வெந்தயம் Related posts:பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்சுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு பிரச்சினையை நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்ரத்த சோகை சரியாவதற்கு ராகி இட்லிவறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்