உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்

நல்ல எண்ணெய் 50 மி.லி
மிளகு 7 எண்ணிக்கை
பூண்டு(பற்கள்) 4 எண்ணிக்கை
வெந்தயம் 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • மிளகு மற்றும் பூண்டு(பற்கள்) தனித்தனியாக இடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 50 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த எண்ணெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் வெந்தயம் சேர்த்துக்கொண்டு 25 மி.லி வரும் வரை எண்ணெய்யை சூடுபடுத்தவும்.
  • பிறகு எண்ணெய்யை ஆற வைத்து வடிகட்டி கொள்ளவும்.
  • இந்த எண்ணெய்யை உச்சந்தலை,தொப்புள் மற்றும் கால் கட்ட விரலில் தடவி வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதை நீங்கள் உணரலாம். 
மிளகு
நல்ல எண்ணெய்
பூண்டு
வெந்தயம்