வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு
வெற்றிலை 1 இலை
வேப்பிலை 5 எண்ணிக்கை
மிளகு 7 எண்ணிக்கை
எலுமிச்சை தோல் அரை துண்டு
இஞ்சி சிறிய துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும்.
  • மேலும் நீருடன் வேப்பிலை,வெற்றிலை,இஞ்சி மற்றும் மிளகு சேர்த்துக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த  நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து இரண்டு வேளை உணவிற்கு முன் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • பெரியவர்கள் 100மி.லி  மற்றும் சிறியவர்கள் 10 மி.லி குடிக்கலாம்.