தேவையான பொருள்
கொத்தமல்லி | 50 கிராம் |
மிளகு | 25 கிராம் |
சுக்கு | சிறிதளவு |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
தண்ணீர் | 400 மி.லி |
துளசி இலை | 8 எண்ணிக்கை |
கற்பூர வள்ளி இலை | 3 எண்ணிக்கை |
இஞ்சி | சிறிய துண்டு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
- பிறகு வறுத்த பொருட்களுடன் சுக்கு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு 400 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.
- மேலும் நீருடன் அரைத்த பொருட்களை ஒன்றரை தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் நீருடன் துளசி இலை,கற்பூர வள்ளி இலை மற்றும் இஞ்சி சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.
- பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீரை தினந்தோறும் ஒரு வேளை குடித்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்கும்.