முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் பனை வெல்லம் தவிர மீதி உள்ள எல்லா பொருட்களையும் நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு இந்த நீருடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு உருவான இந்த நீரை 10 மாத குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி மற்றும் 1-3 வயது உள்ள குழந்தைகளுக்கு மூன்று தேக்கரண்டி காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் கொடுக்கவும்.
தொடர்ந்து 3 நாட்கள் இந்த நீரை குடித்து வர குழந்தைகளுக்கு பசி தன்மை அதிகரிக்கும்.