கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் கொள்ளு மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக வைக்கவும்
வறுத்து போடி செய்ய தேவையான பொருட்களை, 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆரிய பின் போடி செய்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த கொள்ளினை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, பொடித்த பொடியை தூவி, குறைந்த தீயில் பிரட்டவும்
நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.