உடலை வலிமையாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி தேநீர்

தேவையான பொருள்

கொத்துமல்லி விதை1 டீஸ்பூன்
சுக்கு பொடிதேவையான அளவு
நாட்டுச் சர்க்கரைதேவையான அளவு

செய்முறை

 

    • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
    • கொத்துமல்லி விதைகளை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
    • பிறகு ஊற வைத்த கொத்துமல்லி விதை மற்றும் அதே தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
    • மேலும் இதனுடன்  தேவையான அளவு சுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • பிறகு இதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
    • இந்த தேநீரின் சுவையை மேலும் அதிகரிக்க தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும்.இந்த தேநீரை குழந்தைகளும் குடிக்கலாம்.

நன்மை:

  •  உடலில் இருக்கும் வாயுவை வெளியேற்றுகிறது.
  •  ஒற்றைத்தலைவலி தீவிரம் குறைக்கும். 
  • இரத்த அழுத்தம், நீரீழிவு, பித்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 
  • பெண்களுக்கு மாதவிடாய் ஹார்மோனை சீராக வைக்க உதவுகிறது. 
  • சைனஸ், சளி தொந்தரவுகளிலிருந்தும் காக்கிறது.