மருத்துவ குணமிக்க முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

முருங்கை கீரை இலைஒரு கைப்புடி அளவு
பச்சை
மிளகாய்
3 எண்ணிக்கை
மிளகு மற்றும் சீரகம் (அரைத்த பொடி )10 கிராம்
சீரகம்5 கிராம்
சின்ன வெங்காயம்100 கிராம்
தக்காளி250 கிராம்
மஞ்சள் தூள்5 கிராம்
உப்புதேவையான அளவு
நல்ல எண்ணெய்தேவையான அளவு
தண்ணீர்200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் சீரகம் மற்றும் நன்கு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொண்டு லேசாக வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக்கொண்டு வசக்க வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு கறிவேப்பிலை,கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
  • பிறகு 200 மி.லி நிறையும் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.கடைசியாக முருங்கை கீரை இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இப்போது மருத்துவ குணமிக்க முருங்கை கீரை சூப் தயார் ஆகி விடும்.