சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறை August 18, 2020 | No Comments தேவையான பொருள் கொத்தமல்லி 10 கிராம் இஞ்சி சிறிய துண்டு மிளகு 10 எண்ணிக்கை துளசி இலை ஒரு கைப்புடி அளவு ஏலக்காய் 1 தேயிலை தூள் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் 100 மி.லி நாட்டு சர்க்கரை தேவையான அளவு பால் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.200 மி.லி பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கொத்தமல்லி,இஞ்சி,துளசி இலை,மிளகு,ஏலக்காய் நன்கு இடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் இடித்த பொருட்கள் மற்றும் தேயிலை தூள் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.மேலும் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொண்டு இந்த நீரை 50 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீரை ஏற்கனவே வடிகட்டிய பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.இப்போது இருமல் மற்றும் சளியை குணமாக்கும் தேநீர் தயார். தண்ணீர் இஞ்சி மிளகு துளசி இலை தேயிலை ஏலக்காய் கொத்தமல்லி நாட்டு சர்க்கரை Related posts:டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வுபெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை