உடல் வலிமை பெற

தேவையான பொருள்

கிராம்பு 10 கிராம்
சிறுநாகப்பூ20 கிராம்
ஏலக்காய்30 கிராம்
இலவங்கப்பட்டை40 கிராம்
இலவங்கப்பத்திரி50 கிராம்
சீரகம் 60 கிராம்
கொத்தமல்லி 70 கிராம்
மிளகு 80 கிராம்
திப்பிலி160 கிராம்

சுக்கு 

320 கிராம்

செய்முறை

  • பாலாவியலாக வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்ட சீமை அமுக்கராக்கிழங்கு 640 கிராம்,

  • இவை அனைத்தையும் நன்கு இடித்துப் பொடி செய்து ஒரு மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இதுவே அமுக்கராச்சூரணம் ஆகும்.

  • இதைக் காலை, மாலை இருவேளை 1 முதல் 2 கிராம் தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து உண்டுவர உடல் உரமாகும்.
  • வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும். அமுக்கராக்கிழங்கு சேர்த்துச் செய்யக்கூடிய `அமுக்கரா லேகியம்’ அல்லது `அசுவகந்தி இளகம்’, எல்லாச் சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.
  • இதை உட்கொண்டால் மேற்கண்ட எல்லா நன்மைகளும் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் அசுவகந்தா பலாத்தைலம் தேய்த்துக் குளித்துவர தலை மற்றும் கபம், சுரம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி உடல் வலிமை அடையும்.