முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் முருங்கைக்கீரை பொடி கிரீன் தேநீர் பொடி மற்றும் புதினா இலை ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
பிறகு இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு தேநீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது உடலுக்கு சுறுசுறுப்பை தரும் முருங்கை தேநீர் தயார் ஆகிவிடும்.
இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.