தேவையான பொருள்
| சுக்கு | 20 கிராம் |
| மிளகு | 20 கிராம் |
| திப்பிலி | 20 கிராம் |
| கடுக்காய் | 1 |
| மஞ்சள் பொடி | சிறிதளவு |
| ஏலக்காய் | 2 எண்ணிக்கை |
| சித்தரத்தை | 20 கிராம் |
| அதிமதுரம் | 20 கிராம் |
| கிராம்பு | 20 கிராம் |
| ஓமம் | 20 கிராம் |
| தண்ணீர் | 300 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் தவிர மீதமுள்ள பொருட்களை சிறிது வறுத்துக்கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
- மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்துக்கொண்டு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் இந்த நீருடன் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் தண்ணீர் 100 மி.லி வரும்வரை கொதிக்க விடவும்.
- பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது மூலிகை தேநீர் தயார் ஆகிவிடும்.
- இதனை தொடர்ந்து மூன்று வேளைகள் குடித்து வந்தால் வைரஸ் நோய் முற்றிலுமாக குணமாகும்.

