உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்

எலுமிச்சை

நம்முடைய உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கலாம். ஆனால் அது உடலினுள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும். மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகள் தான், இதை காரத்தன்மை நிறைந்த உணவாக மாற்றுகிறது. இந்த எலுமிச்சையை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. சர்க்கரையும் மிகக் குறைவு. ஆப்பிள் பழத்தின் pH அளவு 8 ஆகும். இது உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் இவற்றில் உள்ள நொதிப் பொருள், உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலையில் பராமரிக்க உதவும். அதோடு உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், தினமும் கட்டாயமாக ஆப்பிளை உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேரிக்காய்

இந்த பழங்களிலும் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்கும் தன்மை மிக அதிகம். இந்த உணவுகளில் உள்ள pH அளவு 8.5. அதோடு இவற்றில் ஃப்ளேவோனாய்டுகள் மிக அதிகமாக உள்ளது. இந்த பழங்களில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த உணவுகள் இரத்தத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். குறிப்பாக, உடலில் காரத்தன்மையை அதிகரித்து, உடலுக்கு அதிகளவு ஆற்றலை வழங்கும். உடலின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

பப்பாளி, தர்பூசணி

இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த இரண்டு பழங்களிலும் pH அளவானது 8.5 ஆக இருக்கிறது. இது சிறுநீரகங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த பழங்களில் வைட்டமின்களும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளது. செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். குடலை சுத்தம் செய்யும்.

தானியங்கள்

தானியங்களில் புரோட்டீன், பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன. அன்றாட உணவில் தானியங்களை ஒருவர் சேர்த்து வந்தால், நிச்சயம் அவர்களது உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பீன்ஸ் வகைகள்

ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளுள் மிக முக்கியமானது பருப்பு வகைகள். பருப்பு வகைகளான பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்றவை உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்கச் செய்யும். அதோடு நமக்குத் தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவையும் கிடைக்கின்றன.

தானியங்கள்
பீன்ஸ் வகைகள்