Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203
Deprecated: Required parameter $width follows optional parameter $attach_id in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/helpers/helpers.php on line 366
Deprecated: Required parameter $height follows optional parameter $attach_id in /home/naturalhomeremed/public_html/wp-content/plugins/js_composer/include/helpers/helpers.php on line 366 வாழைத்தண்டு மூலம் குணமாகும் நோய்கள் என்ன தெரியுமா...?
வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காதுநோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலிமற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச்சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
வாழைத் தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரை பாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்து வர கல்லடைப்பு நீங்கும். நீர்எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.
வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணம் குறையும். உடலில் உள்ளநச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.
வாழைத் தண்டுசூப் (வாழைத் தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது.
வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.